மேலும்

மாதம்: October 2026

சிறிலங்கா அரசின் சட்டமூலங்களை எதிர்க்க அனைத்துலக ஆதரவு கோரிய சஜித்

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பாதுகாப்புச் சட்டங்களை எதிர்ப்பதற்கு,  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அனைத்துலக  ஆதரவைக் கோரியுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் இந்தியாவின் 3 போர்க்கப்பல்கள்

இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவைச் சேர்ந்த கப்பல்கள் மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான கப்பல் என  மூன்று கப்பல்கள் நேற்று சிறிலங்காவை வந்தடைந்தன.

கொழும்பு துறைமுகத்திற்கு மீண்டும் வந்த அமெரிக்க போர்க்கப்பல்

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான ‘யுஎஸ்எஸ் கன்பெரா’ (USS Canberra – LCS-30) என்ற போர்க் கப்பல், எரிபொருள் மற்றும் ஏனைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக  நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைகள் புறக்கணிப்பு

சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைகள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மேல் நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை என, ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவ தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்புக்கு வரும் இந்திய கடற்படைக் கப்பல்கள் அணி

இரண்டு கடற்படைக் கப்பல்கள் மற்றும் ஒரு கடலோரக் காவல்படை கப்பலை உள்ளடக்கிய, இந்திய கடற்படையின் பயிற்சிப் படைப்பிரிவு ஒன்று, மூன்று நாள்கள் நல்லெண்ணப் பயணமாக இன்று  கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளது.

40 ஈரானிய மாலுமிகளை மீட்டு தெஹ்ரானுக்கு அனுப்பியது சிறிலங்கா

காலிக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சிக்கியுள்ள வணிகக் கப்பல்களில் இருந்த 40 ஈரானிய மாலுமிகள், சிறிலங்கா கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டு ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

காலியை நெருங்கிய மேலும் 6 ஈரானிய எண்ணெய் கப்பல்கள்- அமெரிக்கா கண்காணிப்பு

சிறிலங்காவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இயங்கி வந்த குறைந்தது ஆறு ஈரானிய எண்ணெய் கப்பல்கள், ஒக்டோபர் 23 ஆம் நாள் காலிக்கு அருகில், முன்னர் நங்கூரமிட்ட இடத்தை நோக்கித் திரும்பியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

27 ஈரானிய கடற்படையினருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள சிறிலங்கா

ஈரானிய கப்பல்களுக்கு, மனிதாபிமான உதவிகளை வழங்கும் போது அனைத்துலக மரபுகள் மற்றும் கடல்சார் சட்டத்திற்கு முற்றிலும் இணங்கவே சிறிலங்கா செயற்படுகிறது என சிறிலங்காவின் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கும்

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம், மட்டுமீறிய துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுப்பதுடன், மனித உரிமைகள் மீது கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இடைக்கால அறிக்கையை நிராகரிக்கிறோம்

பேராசிரியர் ராஜ் சோமதேவ, இனிவருங்காலங்களில் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுடன் தொடர்புடைய விவகாரங்களில்  உள்வாங்கப்படக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.