மேலும்

திலீபன் உருவச் சிலையை அடாத்தாக எடுத்துச் சென்ற சிறிலங்கா காவல்துறை

நல்லூரில் நிறுவப்பட்டிருந்த தியாகதீபம் திலீபனின் உருவச் சிலை சற்று முன்னர் சிறிலங்கா காவல்துறையினரால் அடாத்தாக பெயர்த்துச் செல்லப்பட்டுள்ளது.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் கடந்த 15ஆம் நாள், தியாக தீபம் திலீபனின் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு 12 நாட்களாக நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை வைக்கப்பட்டதற்கு சிறிலங்காவின் தென்பகுதியில் சிங்களப் பேரினவாதிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததுடன், அதனை அகற்றப் போவதாகவும் எச்சரித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று நினைவேந்தல் நிறைவடைந்த நிலையில் இன்று அதிகாலை சிறிலங்கா காவல்துறையினர்,  தியாக தீபம் திலீபனின் உருவச் சிலையை எடுத்துச் சென்றுள்ளனர்.

சிறிலங்கா காவல்துறையின் இந்த நடவடிக்கை தமிழ் மக்களிடையே கடும் எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *