மேலும்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் 15 பேர் குற்றவாளிகளாக தீர்ப்பு- 9 பேர் விடுதலை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 9 பேர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக 24 பேர் மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை, கொழும்பு மேல்  நீதிமன்றத்தின் நிரந்தர ‘ட்ரயல்-அட்-பார்’ (Permanent Trial-at-Bar) அமர்வு வழங்கி வருகிறது.

தாக்குதல்களுக்குச் சதி செய்தல் மற்றும் அதற்குத் துணைபுரிதல் உள்ளிட்ட 23,270-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன.

குற்றம்சாட்டப்பட்ட 24 பேரில் 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய ஒன்பது பேர் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமின் முக்கிய கூட்டாளியாகப் புலனாய்வாளர்களால் அடையாளம் காணப்பட்ட நௌபர் மௌலவியும் தண்டனை பெற்றவர்களில் அடங்குகின்றார்.

நீதிமன்றம் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கான தண்டனைகளை அறிவிப்பதற்காக விரைவில் மீண்டும் கூடவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *