செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 10 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின் போது 10 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 55வது நாளான நேற்று 8 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 582 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 573 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது கட்ட அகழ்விற்கு அனுமதிக்கப்பட்ட 56 நாள்கள் இன்றுடன் நிறைவடையவுள்ளன.

