மேலும்

பேராசிரியர் ரவீந்திரநாத் படுகொலை- பிள்ளையான் மீது குற்றப்பத்திரம் தாக்கல்

சிறிலங்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக, பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பிள்ளையான் உள்ளிட்டவர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.

2006ஆம் ஆண்டு டிசெம்பர் 16ஆம் திகதிக்கும் 18ஆம் திகதிக்கும் இடையில் பேராசிரியர் ரவீந்திரநாத் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சட்டமா அதிபர் திணைக்களம் குற்றம்சாட்டியுள்ளது.

பிள்ளையானுடன், ஜெயந்தன் எனப்படும் கதிர்காமத்தம்பி ஜெயகிருஷ்ணன், ஜெயகாந்தன் எனப்படும் நிமால் தேவசுகன், சிம்பு அல்லது நகுலன் எனப்படும், நடராசா நகுலேஸ்வரன் ஆகியோருக்கு எதிராக  பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *