இந்தியாவுக்கு தப்பிக்கும் குற்றவாளிகள்- பாக்கு நீரிணையில் பாதுகாப்பு அதிகரிப்பு.
தேடப்படும் குற்றவாளிகள் மன்னார் கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, வடக்கில் பாக்கு நீரிணைப் பகுதியில், கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்துலக ஆட்கடத்தல் சக்திகளின் ஆதரவுடன், மிகவும் தேடப்படும் பிரபல குற்றவாளிகள் சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பித்து மத்திய கிழக்கு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வாரம், 34 மற்றும் 35 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள், மன்னார் வழியாகப் படகில் இந்தியா சென்றடைந்த சிறிது நேரத்திலேயே இந்திய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அண்மையில் வத்தளையில் ஒரு பிறந்தநாள் விழாவின் போது ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இருவரே அவர்கள் தெரியவந்துள்ளது.
அந்த இரண்டு சந்தேக நபர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு வடக்கு வடக்கு பிரிவின் குற்றத் தடுப்புபு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குற்றமிழைத்தவர்கள் கடல் வழியாக தப்பிச் செல்வதை தடுக்க சிறிலங்கா கடற்படையினர் பாக்கு நீரிணையில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
