மேலும்

Tag Archives: பாக்கு நீரிணை

பதற்றத்தை தணிக்க 85 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கிறது சிறிலங்கா

கச்சதீவு அருகே தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் வகையில், தாம் கைது செய்து தடுத்து வைத்துள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய சிறிலங்கா, இந்திய அரசுகள் இணக்கம் கண்டுள்ளன.

மன்னார் மீனவர்களுடன் சமரசத்தை ஏற்படுத்தும் பேராசிரியர் சூரியநாராயணின் முயற்சி தோல்வி

பாக்கு நீரிணையில் இந்திய- சிறிலங்கா மீனவர்கள் கூட்டாக மீன்பிடிப்பது தொடர்பாக இந்தியப் பேராசிரியர் வி.சூரியநாராயண், முன்வைத்த யோசனையை மன்னார் மீனவர்கள் நிராகரித்துள்ளனர்.

பாக்கு நீரிணையில் கூட்டு ரோந்து – சிறிலங்காவின் திட்டத்தை பரிசீலிக்க இந்தியா இணக்கம்

பாக்கு நீரிணையில் இந்திய-சிறிலங்கா கடற்படைகள் கூட்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்த சிறிலங்காவின் யோசனையை இந்தியா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள இணங்கியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மூன்று கோரிக்கைகள் – நிராகரித்தது சிறிலங்கா

மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இந்தியத் தரப்பில் முன்வைக்கப்பட்ட மூன்று கோரிக்கைகளை சிறிலங்கா அமைச்சர்கள் நிராகரித்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கச்சதீவில் புதிய தேவாலயம் கட்டுகிறது சிறிலங்கா கடற்படை

பாக்கு நீரிணையில் அமைந்துள்ள கச்சதீவில், புதிய தேவாலயத்தை அமைக்கும் பணிகளை சிறிலங்கா கடற்படை ஆரம்பித்துள்ளது.

இந்தியாவுடன் தரைவழி இணைப்பை ஏற்படுத்தும் திட்டம் – பரிசீலிக்கத் தயார் என்கிறது சிறிலங்கா

இராமேஸ்வரத்தையும் தலைமன்னாரையும் இணைக்கும் தொடருந்து மற்றும் நெடுஞ்சாலை இணைப்பு வழியை உருவாக்குவது தொடர்பாக இந்திய அரசாங்கம் இதுவரையில் சிறிலங்காவிடம் அதிகாரபூர்வமான  தகவலைப் பரிமாறவில்லை என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கான தரைவழிப்பாதை திட்டம் விரைவில் சாத்தியமாகும்- இந்திய அரசு நம்பிக்கை

தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும், சிறிலங்காவின் தலைமன்னாரையும் இணைக்கும் தரைவழி மற்றும் தொடருந்துப் பாதை இணைப்பு விரைவில்  சாத்தியமாகக் கூடும் என்று இந்திய மத்திய அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் தரைவழிப்பாதை திட்டம் சிறிலங்காவுக்குத் தெரியாதாம்

இந்தியாவையும் சிறிலங்காவையும் இணைக்கும் வகையில் பாக்கு நீரிணை வழியாக நெடுஞ்சாலை மற்றும் தொடருந்துப்பாதை அமைக்கும் திட்டம் தொடர்பாக, இந்தியா தம்முடன் எந்த பேச்சுக்களையும் நடத்தவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

‘மோடியின் அறிவுரையும், யாழ்ப்பாண மக்களின் யதார்த்தமும்’ – இந்திய ஊடகவியலாளரின் பார்வை

சிறிலங்கா அரசாங்கமானது ஒருபோதும் அழுத்தமின்றித் தனக்கான பணிகளை ஆற்றவில்லை என்பதைத் தனது 67 ஆண்டுகால அனுபவத்தின் மூலம் உணர்ந்துள்ளதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிடுகிறார். இவர் கூறிய இந்த அழுத்தம் என்பது இந்திய அரசாங்கத்திடமிருந்து வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகிறார்.