சிறிலங்காவில் தொடர்ந்து நிறுத்தப்படவுள்ள இந்திய இராணுவம்
சிறிலங்காவில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பெய்லி பாலங்களை அமைக்கும் பணிகளுக்காக இந்திய இராணுவ அணியொன்று தொடர்ந்து சிறிலங்காவில் தங்கியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பெய்லி பாலங்களை அமைக்கும் பணிகளுக்காக இந்திய இராணுவ அணியொன்று தொடர்ந்து சிறிலங்காவில் தங்கியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்கு வரும் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களைக் கையாள்வதற்கான தர நடைமுறைகள், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இறுதி செய்யப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தில் பணியாற்றிய 28 பாகிஸ்தானியர்களும் இரண்டு சீனர்களும், பணிகளை முடித்துக் கொண்டு, சிறிலங்காவை விட்டு வெளியேறியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பேரிடருக்குப் பிந்திய மீள்கட்டுமானப் பணிகளுக்கான இந்தியாவின் 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவிப் பொதியை கையாளுவதற்காக, சிறிலங்கா மற்றும் இந்திய அதிகாரிகளைக் கொண்ட கூட்டுக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.
பேரிடரைத் தொடர்ந்து சிறிலங்காவின் நிவாரணம், மீட்பு மற்றும் மறுவாழ்வு முயற்சிகளை ஆதரிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் டிட்வா புயலினால் சேதம் அடைந்துள்ள பாலத்தைப் புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வேகமாக மாறிவரும் மற்றும் சவாலான உலகளாவிய பாதுகாப்பு சூழலுக்கு மத்தியில் பிராந்திய கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்தியாவின்தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் வலியுறுத்தியுள்ளார்.
வரிகளைக் குறைப்பதற்கான நிபந்தனையாகவும், சோபா ( SOFA) எனப்படும் படைகளை நிலைப்படுத்தும் உடன்பாட்டைக் கையெழுத்திடுவதற்கான முன்னோடியாகவும், சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தத்தை மேற்கொண்டதா என்று சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் உறுப்பு நாடுகளின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் ஏழாவது கூட்டம் இன்று புதுடெல்லியில் நடைபெறவுள்ளது.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு சுமார் 15 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.