ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்
ஐ.நா பொதுச்சபையின் 80வது அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கை சந்தித்துப் பேசியுள்ளார்.
ஐ.நா பொதுச்சபையின் 80வது அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கை சந்தித்துப் பேசியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டு பொறிமுறை மூலம், மனித உரிமைகள் மீறல்களுக்கு பொறுப்புக்கூறலைத் தொடர சிறிலங்கா அரசாங்கம் தயாராக உள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த வகையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது, மேலும் தடைகளை விதிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், வோல்கர் டர்க் உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் பதில் அறிக்கை ஒன்றைத் தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோசமான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களம் ஒரு பெரிய தடையாக இருப்பதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கிய, ரோம் சட்டத்தை சிறிலங்கா, தற்போது அங்கீகரிக்க வாய்ப்பில்லை என்று சிறிலங்கா வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
பல தசாப்த கால தண்டனை விலக்குரிமையை முடிவுக்குக் கொண்டு வந்து, கடந்த கால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க சிறிலங்கா அரசுக்கு ஒரு “வரலாற்று வாய்ப்பு” கிடைத்துள்ளது என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.
செம்மணிப் புதைகுழிகள் பற்றிய உண்மைகளை சர்வதேச விசாரணையில் வெளிப்படுத்தத் தயாராவுள்ளதாக சோமரத்ன ராஜபக்ச கூறியுள்ள நிலையில், அதற்குரிய நடவடிக்கைகளை சிறிலங்கா அதிபரும், சர்வதேச சமூகமும் முன்னெடுக்க வேண்டும் என தமிழ் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வடக்கு கிழக்கில் சிறிலங்கா இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு சிறிலங்கா படை அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.