புதிய எரிசக்தி அமைச்சராக அனுர கருணாதிலக நியமனம்
சிறிலங்காவின் புதிய எரிசக்தி அமைச்சராக அனுர கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான இந்த நியமனத்தை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, வழங்கியுள்ளார்.
இன்று பிற்பகல் அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில், சிறிலங்கா அதிபர் முன்னிலையில் அனுர கருணாதிலக எரிசக்தி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஏற்கனவே அவரிடம் உள்ள, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சுக்களுடன், எரிசக்தி அமைச்சையும் அவர் நிர்வகிப்பார்.
எரிசக்தி அமைச்சராக இருந்த குமார ஜயகொடி கடந்த வெள்ளிக்கிழமை பதவி விலகியதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

