எரிசக்தி அமைச்சு அனுர கருணாதிலகவிடம்?
எரிசக்தி அமைச்சர் பதவிக்கு, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எரிசக்தி அமைச்சராக இருந்த குமார ஜயகொடி பதவி விலகியதை அடுத்தே, அனுர கருணாதிலக அந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் அவரது இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, வரும் நாட்களில் பல அமைச்சர்களின் பதவிகளில் மாற்றங்கள் நடைபெறும் வாய்ப்பு உள்ளதாகவும், சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
