கொழும்பு துறைமுகத்தில் இந்தியாவின் 3 போர்க்கப்பல்கள்
இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவைச் சேர்ந்த கப்பல்கள் மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான கப்பல் என மூன்று கப்பல்கள் நேற்று சிறிலங்காவை வந்தடைந்தன.
இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் தீர், ஐஎன்எஸ் சுஜாதா மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படையின் சாரதி ஆகிய கப்பல்களில் மொத்தம் 135 பயிற்சி அதிகாரிகள் பயணம் செய்கின்றனர்.
கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் காலத்தில், சிறிலங்கா கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பயிற்சி பரிமாற்றங்கள் மற்றும் தொழில்முறை சார்ந்த நிகழ்வுகளில் இவர்கள் பங்கேற்பார்கள்.
இந்தக் கப்பற்படைப் பிரிவு ஒக்டோபர் 28-ஆம் நாள் வரை கொழும்பில் தங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

