எரிபொருள் ஒதுக்கீட்டு முறை இன்னும் கடுமையாக்கப்படும்
எரிபொருள் இறக்குமதிக்கான அந்நியச் செலாவணிச் செலவினம் வேகமாக அதிகரித்துள்ளதால், எரிபொருளுக்கான கியூ.ஆர் ஒதுக்கீட்டு முறை கடுமையாக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.
எரிபொருள் இறக்குமதிக்கான அந்நியச் செலாவணிச் செலவினம் வேகமாக அதிகரித்துள்ளதால், எரிபொருளுக்கான கியூ.ஆர் ஒதுக்கீட்டு முறை கடுமையாக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.
மத்தல அனைத்துலக விமான நிலையத்தில் முதலீடு செய்வதற்கு இந்திய, சீன நிறுவனங்கள் மாத்திரமன்றி, மத்திய கிழக்கு நிறுவனங்களும் ஆர்வம் காட்டுவதாக சிறிலங்காவின் துறைமுகங்கள். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
உள்ளூரில் கூடுதல் சந்தை வாய்ப்பு அளிக்கப்படாவிட்டால், 3.7 பில்லியன் டொலர் மதிப்பிலான அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்தை சினோபெக் நிறுவனம் முன்னெடுக்காது என்று சீனா அறிவித்துள்ளது.
காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி மற்றும் அதனை இந்தியாவினால் நியமிக்கப்பட்ட அமைப்பு மூலம் நிர்வகிப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவைத் தயாரிக்கும் பணி இந்த மாதம் நிறைவடையும் என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் முன்மொழியப்பட்டுள்ள சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டம் குறித்து முடிவெடுக்க அரசாங்கத்திற்கு குறைந்தது இன்னும் ஓரிரு மாதங்கள் தேவை என்று, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் புதிய எரிசக்தி அமைச்சராக அனுர கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான இந்த நியமனத்தை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, வழங்கியுள்ளார்.
மத்திய கிழக்கு சந்தைகளுக்கு அனுப்பப்படும் தேயிலை உள்ளிட்ட சரக்குகளை மறு அறிவித்தல் வரை துறைமுகங்களுக்கு கொண்டு வர வேண்டாம் என்று ஏற்றுமதியாளர்களிடம் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக இந்தியாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவு இறுதி செய்யப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷ அபேவிக்ரம பதவியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் அழுத்தங்களை அடுத்தே, விமான நிலைய மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் நிறுவனத்தின் தலைவர் எயார் சீவ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம பதவி விலகியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.