ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது
சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் தலைவரான மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் தலைவரான மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டில் சிறிலங்கா 1,062.8 மில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றுள்ளதாக சிறிலங்கா முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது. இதில் சிங்கப்பூரும் இந்தியாவும் முன்னணியில் உள்ளன.
தைப்பொங்கலுக்கு அடுத்த நாள், யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்ட ஒரு நிகழ்விற்காக, 11,079,075.50 (11 மில்லியன்) ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த எட்டு நிலக்கரி கப்பல்களினால் 7,672 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா மின்சார சபை அறிவித்துள்ளது.
சிறிலங்காவில் காணாமல் போன பிள்ளைகளுக்காக தாய்மார் அணி திரண்டுள்ளதாக ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் யூனியனும், சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் உரை நிகழ்வை ரத்துச் செய்துள்ளது.
மண்டைதீவில் அனைத்துலக துடுப்பாட்ட மைதானம் மற்றும் விளையாட்டு வளாகம் அமைக்கும், அனைத்து கட்டுமான நடவடிக்கைகளையும், சுற்றுச்சூழல் அனுமதி செயல்முறை முடியும் வரை நிறுத்துமாறு மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக இந்தியாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவு இறுதி செய்யப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் காலாவதியாகும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தக்க வைத்துக் கொள்வதற்கு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனிடம் சிறிலங்கா அதிபர் உதவி கோரியுள்ளார்.
சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் இந்தியத் திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் தாமதங்கள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.