மேலும்

நாமலின் உரையை ஒக்ஸ்போர்ட் யூனியனும் ரத்துச் செய்தது

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் யூனியனும், சிறிலங்கா பொதுஜன பெரமுன  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் உரை நிகழ்வை ரத்துச் செய்துள்ளது.

தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும்  பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, ஒக்ஸ்போர்ட் யூனியன் இந்த முடிவை எடுத்துள்ளது.

திட்டமிடப்பட்ட போராட்டங்கள் தொடர்பான பாதுகாப்பு கவலைகளை காரணம் காட்டி, கேம்பிரிட்ஜ் யூனியன் முன்னதாக  நாமல் ராஜபக்சவின் உரையை ரத்து செய்வதாக அறிவித்திருந்தது.

மாணவர்கள் சுதந்திரமாக பங்கேற்கும் திறன் குறித்து கவலைகள் எழுந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒக்ஸ்போர்ட் யூனியன் தலைவர் கத்தரின் யாங் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச தற்போது பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் லண்டன் பௌத்த விஹாரையில் அவர் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *