மேலும்

மாதம்: July 2025

சீருடையில் உள்ள ஒவ்வொரு நூலும் சீன நட்புறவை வெளிப்படுத்தும்

மாணவர்களின் சீருடையில் உள்ள ஒவ்வொரு நூலும் சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான நல்லுறவை வெளிப்படுத்தும் என்று, சிறிலஙகாவுக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹோங் தெரிவித்துள்ளார்.

மலேசியாவுக்கு நுழைவிசைவு இன்றி பயணிக்க உடன்பாடு

சிறிலங்காவின் இராஜதந்திர மற்றும் அதிகாரபூர்வ கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களை, நுழைவிசைவு இல்லாமல் தமது நாட்டுக்குள் அனுமதிக்க மலேசியா ஒப்புக் கொண்டுள்ளது.

பெரியவெளி அகதிமுகாம் படுகொலை- 39 வது ஆண்டு நினைவேந்தல்

திருகோணமலை – மூதூர், பெரியவெளி பாடசாலை அகதி முகாமில் தஞ்சமடைந்திருந்த 44 பொதுமக்கள் சிறிலங்கா படையினரால் சுட்டும், வெட்டியும், எரித்தும் படுகொலை செய்யப்பட்ட – 39வது ஆண்டு நினைவேந்தல் நேற்று இடம்பெற்றது.

அரச நிறுவனங்களில் முக்கிய சீர்திருத்தம் தேவை- தீபிகா உடகம எச்சரிக்கை.

சிறிலங்காவின் முக்கிய ஆணைக்குழுக்கள் மற்றும் திணைக்களங்களில் நீண்டகாலமாக நிலவும் பலவீனங்களை நிவர்த்தி செய்யும் அவசர சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் தீபிகா உடகம,  வலியுறுத்தியுள்ளார்.

5 வயதுச் சிறுமியின் எலும்புக்கூடு – சட்டமருத்துவ அதிகாரி அறிக்கை

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் பாடசாலைப் பையுடன் மீட்கப்பட்ட எலும்பு எச்சங்கள், 4 தொடக்கம் 5 வயதுடைய சிறுமியுடையதாக இருக்கலாம் என சட்ட மருத்துவ அதிகாரியின் இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தென்சூடானிடம் மசகு எண்ணெய் வாங்குவது ஆபத்து

தென்சூடானில் இருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்யும் திட்டம்,  கடுமையான புவிசார் அரசியல், விநியோக மற்றும் தொழில்நுட்ப ஆபத்துக்களைக் கொண்டது என தென்சூடானுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் கணநாதன், எச்சரித்துள்ளார்.

வெள்ளியன்று அமெரிக்கா புறப்படுகிறது சிறிலங்கா குழு

வரிகளைக் குறைப்பது தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்காக, சிறிலங்கா அரசாங்க குழு வரும் 18ஆம் திகதி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

கிழக்கு கொள்கலன் முனையத்தை தனியார்மயமாக்க இரகசிய முயற்சி

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை தனியார்மயமாக்க சிறிலங்கா அரசாங்கம்  இரகசிய நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

குர்திஷ் மக்களின் துயர் மிகுந்த நெடிய பயணம்: வடுக்களும், நம்பிக்கையும்

வரலாற்றுப் பக்கங்களில் ஒரு சோக அத்தியாயமாக எழுதப்பட்டிருக்கும், குர்திஷ் மக்களின் வாழ்வும் , அதனோடு பின்னிப் பிணைந்த விடுதலைக்கான ஒரு நெடிய போராட்டமும், இப்போது, ஒரு புதிய பாதையை நோக்கிச் செல்கிறது;இன்னும் சொல்லப்போனால் ,செல்ல வைக்கப்படுகிறது .

நைஜீரியாவிடம் எண்ணெய் வாங்கும் சிறிலங்காவின் திட்டம் பிசுபிசுப்பு

நைஜீரியாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டம் வெற்றியளிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.