மேலும்

நாள்: 17th July 2025

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பில் போராட்டம்

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பிரகீத் எக்னெலிகொட வழக்கில் ஷானியும் சாட்சியாளராக சேர்ப்பு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான வழக்கில், குற்றப் புலனாய்வுத் துறையின் தற்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகர சாட்சியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.

6 மாதங்களில் 144,379  தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

சிறிலங்காவில் 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 144,379  தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ஓமானுடன் சிறிலங்கா புலனாய்வு பகிர்வு உடன்பாடு

ஓமானுடன் சிறிலங்கா புலனாய்வுப் பகிர்வு தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது.

சீருடையில் உள்ள ஒவ்வொரு நூலும் சீன நட்புறவை வெளிப்படுத்தும்

மாணவர்களின் சீருடையில் உள்ள ஒவ்வொரு நூலும் சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான நல்லுறவை வெளிப்படுத்தும் என்று, சிறிலஙகாவுக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹோங் தெரிவித்துள்ளார்.

மலேசியாவுக்கு நுழைவிசைவு இன்றி பயணிக்க உடன்பாடு

சிறிலங்காவின் இராஜதந்திர மற்றும் அதிகாரபூர்வ கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களை, நுழைவிசைவு இல்லாமல் தமது நாட்டுக்குள் அனுமதிக்க மலேசியா ஒப்புக் கொண்டுள்ளது.

பெரியவெளி அகதிமுகாம் படுகொலை- 39 வது ஆண்டு நினைவேந்தல்

திருகோணமலை – மூதூர், பெரியவெளி பாடசாலை அகதி முகாமில் தஞ்சமடைந்திருந்த 44 பொதுமக்கள் சிறிலங்கா படையினரால் சுட்டும், வெட்டியும், எரித்தும் படுகொலை செய்யப்பட்ட – 39வது ஆண்டு நினைவேந்தல் நேற்று இடம்பெற்றது.