மலேசியாவுக்கு நுழைவிசைவு இன்றி பயணிக்க உடன்பாடு
சிறிலங்காவின் இராஜதந்திர மற்றும் அதிகாரபூர்வ கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களை, நுழைவிசைவு இல்லாமல் தமது நாட்டுக்குள் அனுமதிக்க மலேசியா ஒப்புக் கொண்டுள்ளது.
மேலும் இந்த வசதியை இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து சிறிலங்கா கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கும், விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சாதாரண சிறிலங்கா கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு பரஸ்பர நுழைவிசைவு இல்லாத பயணச் சூழலை ஏற்படுத்த மலேசிய அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இந்த முன்னேற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற 32வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், சிறிலங்கா தூதுக்குழுவை வழிநடத்திய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மலேசிய அதிகாரிகளுடனான இருதரப்பு கலந்துரையாடல்களின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.