வெள்ளியன்று அமெரிக்கா புறப்படுகிறது சிறிலங்கா குழு
வரிகளைக் குறைப்பது தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்காக, சிறிலங்கா அரசாங்க குழு வரும் 18ஆம் திகதி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சிறிலங்கா பொருட்களுக்கு 30 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அறிவித்துள்ளார்.
இதனைக் குறைப்பது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்த சிறிலங்காவின் உயர்மட்டக் குழு வரும் வெள்ளிக்கிழமை வொசிங்டனுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளது.
ஓகஸ்ட் 1ஆம் திகதி காலக்கெடுவுக்குள், சிறிலங்காவின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அதிக வரிச் சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சியாகவே இந்தப் பயணம் இடம்பெறவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.