மேலும்

மாதம்: June 2025

சுவிஸ் எயர் விமான விபத்தில் உயிர்தப்பிய லக்ஷ்மன் கதிர்காமர்

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், 1979ஆம் ஆண்டு சுவிஸ்  எயர் விமான விபத்தில் உயிர்தப்பியவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

எழுச்சிக் கவிஞர் பண்டிதர் வீ.பரந்தாமன் காலமானார்

தமிழ்த் தேசிய உணர்வாளரான- எழுச்சிக் கவிஞர் பண்டிதர் வீ.பரந்தாமன் நேற்று காலமானார். வயது மூப்பினால், பருத்தித்துறை புலோலியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றுக்காலை காலமாகியுள்ளார்.

சிறிலங்காவில் எரிபொருள் விலைகளில் உடனடிப் பாதிப்பு இல்லை

உலகச் சந்தையில்  ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை அதிகரிப்பு, உள்ளூர் சந்தையில் எரிபொருள் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவுக்கான விமானப் பயண செலவு அதிகரிப்பு- சிறிலங்கன் நிறுவனம் கவலை

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்ற நிலையினால், ஐரோப்பாவுக்கான சிறிலங்காவின் விமானப் பயணச் செலவினம் கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல்- ஈரான் போரினால் சிறிலங்காவின் பங்குச் சந்தை வீழ்ச்சி

ஈரான் மீது நேற்று அதிகாலை இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியதை அடுத்து, சிறிலங்காவின் பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஹமில்டன் வணசிங்க மரணம்

சிறிலங்கா இராணுவத்தின் 11ஆவது தளபதியாக பணியாற்றிய ஜெனரல் ஹமில்டன் வணசிங்க தனது 91 ஆவது வயதில் நேற்று மரணமானார்.

சாவகச்சேரி நகரசபையில் ஆட்சியமைத்தது தமிழ் தேசிய பேரவை

சாவகச்சேரி நகரசபை தவிசாளராக தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர் வ.சிறிபிரகாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நல்லூர் பிரதேச சபையில் ஆட்சியமைத்தது தமிழ் மக்கள் கூட்டணி

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர் பத்மநாதன் மயூரன் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வராக மதிவதனி தெரிவு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

“இன்னொரு பிரபாகரன் மீண்டும் பிறப்பார்“ – இந்திய இராணுவ முன்னாள் தளபதி

சிறிலங்காவில் சிங்களப் பேரினவாதம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துமானால் இன்னொரு பிரபாகரன் அடுத்த 20- 25 ஆண்டுகளில் மீண்டும் பிறப்பார் என இந்திய இராணுவத்தின் முன்னாள் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அடா ஹஸ்னைன் ( Ata Hasnain) தெரிவித்துள்ளார்.