இஸ்ரேல்- ஈரான் போரினால் சிறிலங்காவின் பங்குச் சந்தை வீழ்ச்சி
ஈரான் மீது நேற்று அதிகாலை இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியதை அடுத்து, சிறிலங்காவின் பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நிலவரங்களினால், உலகளவில் பதற்றம் அதிகரித்துள்ளதுடன், உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளும் சரிவைச் சந்தித்துள்ளன.
நேற்று சிறிலங்காவின் பங்குச் சந்தையில், அனைத்துப் பங்கு விலைக் குறியீடும் 1.33 சதவீதம் அல்லது 234.37 புள்ளிகள் சரிவைச் சந்தித்தன.
பங்குச் சந்தை வீழ்ச்சியடைய முக்கிய காரணம் ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலே என்றும், இது அனைத்துத் துறைகளிலும் விற்பனையை பாதித்தது என்றும், பங்குச் சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவி துணைத் தலைவர் ரஞ்சன் ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஹற்றன் நசனல் வங்கி, DFCC வங்கி, சம்பத் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங், மற்றும் Melstacorp ஆகியவற்றின் பங்குகளின் விலைகளின் வீழ்ச்சி, சந்தையை சரிவிற்கு இட்டுச் சென்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனால், இந்த நிறுவனங்கள் தங்களின் பங்கு விற்பனையை ஒரு கட்டத்தில் நிறுத்திக் கொண்டன.