நல்லூர் பிரதேச சபையில் ஆட்சியமைத்தது தமிழ் மக்கள் கூட்டணி
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர் பத்மநாதன் மயூரன் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்கான அமர்வு இன்று மதியம், வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் நடைபெற்றது.
அதன் போது தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் ப.மயூரன் தவிசாளர் பதவிக்கு முன்மொழியப்பட்ட போது, வேறு எவரும் போட்டியிடாத காரணத்தினால், அவர் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
உப தவிசாளராக ஜெயகரன் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
20 உறுப்பினர்களைக் கொண்ட நல்லூர் பிரதேச சபையில் 7 ஆசனங்களைக் கொண்டிருக்கும் தமிழ் அரசுக் கட்சியும், 6 ஆசனங்களைப் பெற்ற தமிழ் மக்கள் கூட்டணியும், தலா 2 ஆண்டுகள் ஆட்சியைப் பகிர்ந்து கொள்ள இணக்கம் தெரிவித்து உடன்பாட்டில் கையெழுத்திட்டிருந்தன.