மேலும்

நாள்: 18th June 2025

வல்வெட்டித்துறை நகரசபை தலைவராக தவமலர் சுரேந்திரநாதன் தெரிவு

வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளராக தமிழ்த் தேசிய பேரவை சார்பில் முன்னிறுத்தப்பட்ட தவமலர் சுரேந்திரநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா விரைவாக செயற்படவில்லை- ஜெனிவாவில் அனுசரணை நாடுகள் கவலை

மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நல்லாட்சி மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் ஆகியன தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்  சிறிலங்கா அரசாங்கம் விரைவாகச் செயற்படவில்லை என,  அனுசணை நாடுகள் குழு தெரிவித்துள்ளது.

மண்டைதீவு புதைகுழி வெறும் வதந்தி என்கிறார் சிறிலங்கா நீதியமைச்சர்

மண்டைதீவில் உள்ள மனிதப் புதைகுழிகள் குறித்து வெளியிடப்படும் தகவல்கள் வதந்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை என்று சிறிலங்காவின் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மண்டைதீவு புதைகுழிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்- சிறிதரன்

மண்டைதீவு மனித புதைகுழிகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் – இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அதுகுறித்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின்னரே தேர்தல் நடத்தப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கில் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு

சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை தடுப்பதற்கு, சிறிலங்கா கடற்படையின் உதவியை பெறுவது மற்றும் வடக்கு,கிழக்கில் உள்ள காணிகளை விடுவிப்பது குறித்து, பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்கா அதிபர அனுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.