சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஹமில்டன் வணசிங்க மரணம்
சிறிலங்கா இராணுவத்தின் 11ஆவது தளபதியாக பணியாற்றிய ஜெனரல் ஹமில்டன் வணசிங்க தனது 91 ஆவது வயதில் நேற்று மரணமானார்.
சுகவீனம் அடைந்திருந்த அவர் நாரஹேன்பிட்டிய இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றுக்காலை மரணமானார் என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் தெரிவித்துள்ளார்.
1988ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ஹமில்டன் வணசிங்க, 1991ஆம் ஆண்டு நொவம்பர் 15ஆம் திகதி வரை அந்தப் பதவியை வகித்தார்.
1991 நொவம்பர் 19ஆம் திகதி கூட்டுப்படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்ட ஜெனரல் வணசிங்க, 1993ஆம் ஆண்டு செப்ரெம்பர் 6ஆம் திகதி வரை அந்தப் பதவியில் இருந்தார்.
அதன் பின்னர், 1993 செப்ரெம்பர் 7ஆம் திகதி முதல் 1995ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை அவர் சிறிலங்கா பாதுகாப்புச் செயலராகவும் பதவி வகித்திருந்தார்.