சாவகச்சேரி நகரசபையில் ஆட்சியமைத்தது தமிழ் தேசிய பேரவை
சாவகச்சேரி நகரசபை தவிசாளராக தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர் வ.சிறிபிரகாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி நகர சபை தவிசாளர் தெரிவு இன்று பிற்பகல் 3 மணியளவில், சபா மண்டபத்தில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது தமிழ் அரசுக் கட்சி சார்பில் கைலாயபிள்ளையும், தமிழ்த் தேசிய பேரவையின் சார்பில், சிறிபிரகாசும், தவிசாளர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டனர்.
இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில், இருவரும் தலா 7 வாக்குகளை பெற்ற நிலையில், திருவுளச்சீட்டு மூலம் தமிழ்த் தேசிய பேரவையின் உறுப்பினர் வ.சிறிபிரகாஸ் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
உப தவிசாளர் பதவிக்கு , தமிழ் அரசுக் கட்சி பாலமயூரனையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஞா.கிஷோரையும் முன்மொழிந்தன.
இருவரும் தலா 07 வாக்குகளை பெற்ற நிலையில் திருவுளச்சீட்டு மூலம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் ஞா. கிஷோர் உப தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
அதேவேளை சாவகச்சேரி நகராட்சி மன்ற எல்லைக்குள் வசிக்காதவர் என்பதால், உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்யப்பட்ட, தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர் சபை அமர்வில் பங்கேற்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.