மேலும்

நாள்: 19th June 2025

போலி மருந்து மோசடி- அதிர்ச்சி தரும் ஆய்வுகூட பரிசோதனை முடிவு

மோசடியாக இறக்குமதி செய்யப்பட்ட இம்யூனோகுளோபுலின் மருந்தில் சேலைன் மற்றும் ஆபத்தான, தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் மட்டுமே இருந்தன என்றும், எந்த மருத்துவப் பொருட்களும் இல்லை என்றும் ஆய்வுகூடப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

ரம்புக்வெல்ல குடும்பத்தில் ஆறு பேர் கைது- ஐவர் பிணையில் விடுதலை

பணச் சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால்  முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் இரண்டு சபைகளில் ஆட்சியமைத்தது தமிழ் அரசு

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று தவிசாளர் தெரிவு இடம்பெற்ற மூன்று உள்ளூராட்சி சபைகளில் இரண்டில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைத்துள்ளது.

செம்மணி புதைகுழி: அவசர நடவடிக்கை எடுக்குமாறு உமா குமரன் கடிதம்

செம்மணியில் குறைந்தது மூன்று குழந்தைகளின் எலும்பு எச்சங்கள் அடங்கிய ஒரு கூட்டுப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவசர நடவடிக்கை எடுக்குமாறு, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளியேற வழியின்றி இஸ்ரேலில் தவிக்கும் இலங்கையர்கள்

வணிக நோக்கங்களுக்காகச் சென்ற இலங்கையர்கள் பலர், விமானங்கள் இல்லாததால் இஸ்ரேலில் சிக்கித் தவிப்பதாக டெல் அவிவ்வில் உள்ள சிறிலங்கா தூதரகம் தெரிவித்துள்ளது.

அனுரவின் பயணம் குறித்து தவறான தகவல் – விசாரணை ஆரம்பம்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் ஜெர்மனிக்கான பயணம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப முயன்றதாக கூறப்படும் நபர்கள் குறித்து, விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.