கொழும்பு வந்தார் போலந்து வெளியுறவு அமைச்சர்
போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி (Radosław Sikorski) சிறிலங்காவுக்கு மூன்று நாள்கள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவரை சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைமைப் பதவியை போலந்து வகித்து வரும் பின்னணியில், போலந்து வெளியுறவு அமைச்சரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
இன்று பிற்பகல் போலந்து வெளியுறவு அமைச்சர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
அத்துடன் சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, அவர், உயர்மட்ட சந்திப்புகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான உயர் பிரதிநிதியும் ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவருமான கஜா கல்லாஸின் (Kaja Kallas) பிரதிநிதியாக அவர் சிறிலங்காவுக்கு வருகை தந்துள்ளார்.