மேலும்

சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி யாரும் வெற்றிபெற முடியாது- துமிந்த திசநாயக்க

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாமல், பொதுஜன பெரமுனவினாலோ, ஐதேகவினாலோ, புதிய அதிபரை தெரிவு செய்ய முடியாது என, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசநாயக்க தெரிவித்தார்.

தலாவவில். நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், “ 6.5 மில்லியன் வாக்குகளைப் பெறாமல் எந்தக் கட்சியும்  அதிபர் தேர்தலில் வெற்றி பெறமுடியாது.

ஏனெனில், வெற்றிபெறும் வேட்பாளர் மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் மேலதிகமாக ஒரு வாக்கையும் பெற வேண்டும்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், ஐதேக  3.5 மில்லியன் வாக்குகளையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி 1.5 மில்லியன் வாக்குகளையும் பெற்றது. அதற்கு எதிராக  பொதுஜன பெரமுன 5 மில்லியன் வாக்குகளைப் பெற்றது.

பொதுஜன பெரமுன  பெற்ற 5 மில்லியன் வாக்குகள், அதிபர் தேர்தலில் வெற்றிபெற போதுமானதாக இருக்காது. அதே உண்மை ஐதேகவுக்கும் பொருந்தும்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாமல் எந்தவொரு கட்சியும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியாது. அதுவே தீர்மானிக்கும் காரணியாக இருக்கும்.

வரவிருக்கும் அதிபர் தேர்தல் குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி  தனது இறுதி முடிவை அடுத்த சில வாரங்களுக்குள் அறிவிக்கும்.

செப்ரெம்பர் 2 ம் நாள் நடைபெறும் சுதந்திரக் கட்சியின்  ஆண்டு பொதுக் கூட்டத்துக்கு முன்னர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான பரந்த கூட்டணி உருவாகும் என்று நம்புகிறேன்” என்றும் அவர்  அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *