மேலும்

சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பு கருத்தரங்கு

சிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில் ‘கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு -2019’  இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 29ஆம், 30ஆம் நாள்களில் இந்த பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

2011ஆம் ஆண்டு தொடக்கம் சிறிலங்கா இராணுவம் பாதுகாப்புக் கருத்தரங்கு என்ற பெயரில் ஆண்டு தோறும் இந்த நிகழ்வை நடத்தி வந்தது.

எனினும், 2016ஆம் ஆண்டில் இருந்து கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு என்ற பெயரில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.

இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் பாதுகாப்புக் கருத்தரங்கில் பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள், வல்லுனர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *