மேலும்

பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையிலும் பதற்றம்

நீர்கொழும்பு – பல்லன்சேன திறந்தவெளி சிறையிலும் சற்று முன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து இதுவரை மேலதிக விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று காவல்துறை கூறியுள்ளது.

கலவரம் குறித்த தகவல்களைத் தொடர்ந்து, அந்தப் பகுதிக்கு சிறிலங்கா காவல்துறை குழுக்கள் பல அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை குருவிட்ட சிறைச்சாலையிலும், நேற்று மாலை கொழும்பு மகசின் சிறையிலும் நடந்த சம்பவங்களை  அடுத்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *