செம்மணி மனிதப் புதைகுழி எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 500 ஐ தாண்டியது
யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ளது.
செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்று 46வது நாளாக நடைபெற்றது.
இதன்போது மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் அடையாளம் காணப்பட்ட 7 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை மொத்தம் 100 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த 100 நாள் அகழ்வுகளில் இதுவரை 507 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 501 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
