மேலும்

சிறிலங்காவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் – அமெரிக்கா எச்சரிக்கை

சிறிலங்காவில் மீண்டும்  தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என்று, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிறிலங்காவில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில்- அமெரிக்க தூதரகத்தினால் நேற்று முன்தினம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“எதிர்வரும் விடுமுறை நாட்களில் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க குடிமக்களுக்கு, இரண்டாம் நிலை எச்சரிக்கை அறிவிப்பை அமெரிக்க தூதரகம் நினைவுபடுத்துகிறது.

எதிர்வரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகள் கூடும் இடங்கள், போக்குவரத்து நிலையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், விடுதிகள், அரச செயலகங்கள், வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், பிரமாண்டமாக நடத்தப்படும் விளையாட்டுகள் மற்றும் கலாசார நிகழ்வுகள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பிரதான பகுதிகளில், தீவிரவாதிகள், சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தக் கூடும்,

எனவே, சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கு வேண்டும்.

அத்துடன், சுற்றுலா இடங்கள் மற்றும் நெரிசலான பொது இடங்களுக்குச் செல்லும்போது உங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.

உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள்.

உள்ளூர் ஊடகங்களைக் கண்காணித்து, புதிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உங்கள் திட்டங்களை சரிசெய்யவும்.

விழிப்பூட்டல்களைப் பெற ஸ்மார்ட் டிராவலர் பதிவு திட்டத்தில் (STEP) பதிவுசெய்வதன் மூலம்,, அவசரகாலத்தில் உங்களைக் கண்டுபிடிப்பதை எளிதாக்குகிறது.

முகநூல் மற்றும் கீச்சகத்தில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தை பின்தொடருங்கள்.

சிறிலங்காவின் குற்ற மற்றும் பாதுகாப்பு அறிக்கையை மதிப்பாய்வு செய்யவும்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் அமெரிக்கா குடிமக்கள் எப்போதும் அவசரகால சூழ்நிலைகளுக்கு ஒரு திட்டத்தை வைத்திருக்க வேண்டும். பயணியின் சரிபார்ப்பு பட்டியலை மதிப்பாய்வு செய்யவும்.” என்றும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *