மேலும்

மாதம்: June 2019

கிளிநொச்சி விபத்தில் 5 சிறிலங்கா படையினர் பலி- ஒருவர் ஆபத்தான நிலையில்

கிளிநொச்சி – 55 ஆவது கட்டையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் உயிரிழந்த சிறிலங்கா படையினரின் எண்ணிக்கை 5 என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா மீதான பயண எச்சரிக்கை:  நீக்கியது சீனா – தளர்த்தியது அமெரிக்கா

சிறிலங்கா தொடர்பான பயண எச்சரிக்கையை சீனா நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. ஜூன் 22 ஆம் நாள் தொடக்கம் இந்த பயண எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக, சீன அரசின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் தொடருந்து மோதி 6 சிறிலங்கா படையினர் பலி

கிளிநொச்சியில் இன்று பிற்பகல்  சிறிலங்கா இராணுவ வாகனம் ஒன்றின் மீது, யாழ்தேவி தொடருந்து மோதியதில், 6 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சிறிலங்காவில் பதற்றம் அதிகரிப்பு – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கவலை

சிறிலங்காவில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை அடுத்து அங்கு பதற்ற நிலை அதிகரித்துள்ளதானது, கவலையை தோற்றுவித்திருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் தெரிவித்துள்ளார்.

“ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை, மறைமுக சக்தியே காரணம்“ – என்கிறார் ஹக்கீம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னால் ஐஎஸ் அமைப்பு இருக்கும் என்று தான் நம்பவில்லை எனவும், இதற்குப் பின்னால், முறைமுக சக்தி ஒன்றே இருந்திருக்கிறது எனவும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாளை றிஷாத், இராணுவத் தளபதியிடம் விசாரிக்கிறது தெரிவுக்குழு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மற்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஆகியோரை நாளை முன்னிலையாகும்படி அழைப்பு விடுத்துள்ளது.

பதவி விலகப் போவதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் எச்சரிக்கை

மாகாணசபைத் தேர்தல்களை நடத்தாமல், அதிபர் தேர்தலை முதலில் நடத்துவதாயின் பதவியை விட்டு விலகப் போவதாக சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.

கோத்தாவை வேட்பாளராக ஓகஸ்ட் 11இல் அறிவிப்பார் மகிந்த – பசில் தகவல்

தமது கட்சியின் அதிபர் வேட்பாளரை எதிர்வரும் ஓகஸ்ட் 11ஆம் நாள், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரான பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

சிறிலங்காவுக்கு சுனாமி ஆபத்து இல்லை

இந்தோனேசியாவில் இன்று காலை ஏற்பட்ட பாரிய நிலஅதிர்வினால் சிறிலங்காவில் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் அனுஷ வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

குரங்கின் கையில் ‘அப்பம்’

இலங்கையில் வாழும் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாக தாமே இருக்க வேண்டும் என்பதில், சிங்கள பௌத்த பேரினவாதம், உறுதியான முடிவில் இருக்கிறது.