மேலும்

மாதம்: February 2019

பாலியல் வன்முறைகள், பாகுபாடுகள் குறித்த ஐ.நா நிபுணர் சிறிலங்கா வருகிறார்

பாலியல் நோக்கு நிலை மற்றும் பால்நிலை அடையாளத்தின் அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான, ஐ.நாவின் நிபுணரான விக்டர் மட்ரிகன் பொர்லோஸ்  சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மாலியில் இருந்து சிறிலங்கா படையினரின் சடலங்களை கொண்டு வருவதில் இழுபறி

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு சிறிலங்கா படையினரின் சடலங்களையும் கொழும்புக்கு கொண்டு வருவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

சூடுபிடிக்கிறது சுங்கப் பணிப்பாளர் நீக்க விவகாரம் – அமெரிக்க தலையீடா?

சுங்களத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் நீக்கப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரங்களிலும் தீவிரமான விவாதங்கள் தோற்றுவித்துள்ளது.

பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை – விசாரணையின்றி விலக்கியது லண்டன் நீதிமன்றம்

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிரான கைது உத்தரவை, பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிவான் நீதிமன்றம் விலக்கிக் கொண்டுள்ளது.

வலுவடைகிறது சிறிலங்கா நாணயப் பெறுமதி

இந்த ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி அதிகரித்து வருவதாக, சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சீனாவிடம் இருந்து சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன்

சீனாவின் எக்சிம் வங்கியிடம் இருந்து விரைவில் 1 பில்லியன் டொலர் இலகு கடன் சிறிலங்காவுக்குக் கிடைக்கவுள்ளதாக, சிறிலங்காவுக்கான சீன தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு 150 கோடி ரூபா ஒதுக்கியது இந்தியா

இந்திய வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 1000 கோடி ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதும், சிறிலங்காவுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை.

சிறிலங்கா படையினருக்கு பயிற்சி அளிக்கும் இந்திய கடற்படையின் டோனியர் விமானம்

கடற்படை மற்றும் விமானப்படைக்குப் பயிற்சிகளை அளிப்பதற்காக, இந்திய கடற்டையின் டோனியர் விமானம் ஒன்று கடந்த திங்கட்கிழமை சிறிலங்கா வந்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் சீனா- சிறிலங்கா இடையில் சுதந்திர வணிக உடன்பாடு

சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வணிக உடன்பாடு இந்த ஆண்டு கையெழுத்திடடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சீனாவின் சைனா டெய்லி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் தேசிய நாள் நிகழ்வு – புறக்கணிக்கிறார் சரத் பொன்சேகா

காலி முகத்திடலில் எதிர்வரும் 4ஆம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்காவின், 71 ஆவது தேசிய நாள் நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என்று முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முடிவு செய்துள்ளார்.