நாளை கொழும்பு வரும் ரஷ்ய போர்க் கப்பல்கள் அணி
ரஷ்யாவின் மூன்று போர்க் கப்பல்கள் நாளை கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளதாக, கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் பசுபிக் கப்பல்படையைச் சேர்ந்த ஸ்லாவா வகை ஏவுகணைப் போர்க்கப்பலான வர்யாக், பாரிய நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பலான அட்மிரல் பன்டலேயேவ், துணைக் கப்பலான பொறிஸ் புரோமா ஆகியனவே கொழும்புத் துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணமாக வரவுள்ளன.
விளாடிவோஸ்ரொக்கை தளமாக கொண்ட இந்தப் போர்க் கப்பல்கள் நான்கு நாட்கள் கொழும்பில் தரித்து நிற்கும்.
நேற்று முன்தினம் வங்கக் கடலில் இந்தியக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரஷ்யப் போர்க் கப்பல்களே நாளை சிறிலங்காவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளன.