மேலும்

கிளிநொச்சி நோக்கி நாளை இரண்டு நிவாரண உதவி தொடருந்துகள்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிக்கு நிவாரண உதவிப் பொருட்களுடன், தொடருந்து ஒன்று, கொழும்பு, கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து நாளை புறப்பட்டுச் செல்லவுள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘Save the Train’ என்ற அமைப்பின் ஏற்பாட்டில், இந்த நிவாரண உதவி தொடருந்து, நாளை காலை 6.30 மணிக்கு கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொதுமக்களின் உதவிப் பொருட்களை சேகரிப்பதற்காக, இந்த தொடருந்து, ராகம, கம்பகா, வியாங்கொட, மீரிகம, பொல்கஹவெல, குருணாகல, கணேவத்த, மஹாவ, கல்கமுவ,  மற்றும் அனுராதபுர தொடருந்து நிலையங்களில் நின்று செல்லும்.

அதேவேளை, தொடருந்து திணைக்களத்துடன் இணைந்து,  சிறிலங்கா அதிபர் செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட மற்றொரு நிவாரண உதவி தொடருந்து நாளை பிற்பகல் 2.30 மணியளவில் மாத்தறை தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்படவுள்ளது.

இந்த தொடருந்திலும் பொதுமக்கள் நிவாரண உதவப் பொருட்களை கையளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *