மேலும்

மாதம்: November 2018

சிறிலங்கா அதிபரின் தேசமான்ய விருதை திருப்பி அனுப்புகிறார் தேவநேசன் நேசையா

ஜனநாயக கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் முரணாகச் செயற்பட்டு வரும், சிறிலங்கா அதிபரிடம் இருந்து பெற்ற, தேசமான்ய விருதை, திருப்பி அனுப்புவதாக, ஓய்வுபெற்ற சிவில் அதிகாரியான கலாநிதி தேவநேசன் நேசையா அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 14 ஆம் நாள் வாக்கெடுப்பு – சபாநாயகர் உறுதி

சிறிலங்கா நாடாளுமன்றம் எதிர்வரும் 14ம் நாள் கூடும்போது, அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் வாக்கெடுப்பை நடத்துவற்குத் தீர்மானித்துள்ளதாக, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கலைப்பு – உண்மையில்லையாம்

நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக வெளியாகிய செய்திகளில் உண்மையில்லை என்று சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கோருகிறது அமெரிக்கா

அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் மூன்று அமைச்சர்களை நியமித்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று மாலை இரண்டு அமைச்சர்கள் மற்றும் ஒரு இராஜாங்க அமைச்சருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

மனோ கணேசனிடம் மைத்திரி கேட்ட மூன்று ‘வரங்கள்’

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியை இன்று காலை சந்தித்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

இன்றிரவு நாடாளுமன்றத்தைக் கலைக்க சிறிலங்கா அதிபர் திட்டம்?

சிறிலங்கா நாடாளுமன்றத்தை இன்றிரவு கலைப்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் கிடைத்துள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

கோத்தாவின் வாகனம் உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், அவரது மனைவியும் பயணித்த வாகனம், இன்று காலை விபத்துக்குள்ளாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டமைப்புடன் சிறிலங்கா அதிபர் ஒன்றரை மணிநேரம் பேச்சு

இரா.சம்பந்தன் தலைமையிலான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து நீண்ட பேச்சுக்களை நடத்தியது.

தென்னாசியாவில் விரிவடையும் ஆதிக்கப் போட்டி

சீனா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான தென்னாசியப் பிராந்தியத்தின் பூகோள-மூலோபாய போட்டியில், முக்கிய பங்குதாரராகக் கருதப்படும் சிறிலங்காவின் தற்போதைய அரசியல் குழப்பநிலையை, இவ்விரு நாடுகளும் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.