மேலும்

மேலும் மூன்று அமைச்சர்களை நியமித்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று மாலை இரண்டு அமைச்சர்கள் மற்றும் ஒரு இராஜாங்க அமைச்சருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று மாலை நடந்த நிகழ்வில், சமல் ராஜபக்ச, எஸ்.பி.திசநாயக்க, பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

சமல் ராஜபக்ச, -சுகாதார,  ஊட்டச்சத்து, மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

எஸ்.பி.திசநாயக்க, -நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பவித்ரா வன்னியாராச்சி, -பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

அதேவேளை, கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளர்களான மகிந்த சமரசிங்கவும், கெஹலிய ரம்புக்வெலவும், எதிர்வரும் 14ஆம் நாள் நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னதாக, அனைத்து அமைச்சர்களும் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தனர்.

13 அமைச்சுக்களுக்கான அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் இருப்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *