இந்தியாவுடனான பேச்சுக்களில் இழுபறி
சிறிலங்காவில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பினால், கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக, இந்தியாவுடன் நடத்தப்படவிருந்த பேச்சுக்களில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
சிறிலங்காவில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பினால், கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக, இந்தியாவுடன் நடத்தப்படவிருந்த பேச்சுக்களில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதால் தான், கொழும்பு துறைமுகத்தையும், மத்தல விமான நிலையத்தையும் இந்தியா கோரியது என்று சிறிலங்காவின் கல்வி உயர் கல்வி அமைச்சராக விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தைக் கூட்டி அரசியலமைப்பு நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி, நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் நேற்று கொழும்பில் பேரணியில் ஈடுபட்டனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைப்புச் செய்வது குறித்த முக்கியமான செயற்குழுக் கூட்டம் நாளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
தற்போதைய அரசியல் நெருக்கடியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளுக்கு ஈபிஆர்எல்எவ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கட்டுப்பட்டு செயற்படமாட்டார் என்று அந்தக் கட்சியின் தலைவரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் இன்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்க தூதுவராக பொறுப்பேற்றுள்ள அலய்னா ரெப்லிட்ஸ், இன்று காலை சபாநாயகர் கரு ஜெயசூரியவைச் சந்தித்து தற்போதைய அரசியல் நெருக்கடிகள் குறித்து விவாதித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அண்மையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார பதவி விலகியுள்ளார்.
பிரித்தானியாவில் வசிக்காத இலங்கையர்களும் கூட பிரித்தானிய ஆயுதப் படைகளில் இணைந்து கொள்ள முடியும் என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்துள்ளது.
அட்டையை விட வண்ணத்துப் பூச்சியை நான் விரும்புகிறேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர.