மேலும்

நாள்: 27th October 2018

அரசியலமைப்பை மதித்து செயற்பட வேண்டும் – பிரித்தானியா

அனைத்துக் கட்சிகள் மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரிகள் சிறிலங்காவின் அரசியலமைப்பை மதித்து, சரியான அரசியல் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.

ரணிலுக்கு ஹக்கீம், றிசாத், மனோ ஆதரவு – மகிந்தவின் பக்கம் டக்ளஸ், தொண்டா

கூட்டு அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த தமிழ், முஸ்லிம் கட்சிகள், சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தொடருவதற்கு, தொடர்ந்தும் ஆதரவளிக்க, முன்வந்துள்ளன.

ரணிலை நீக்கும், மகிந்தவை நியமிக்கும் அரசிதழ்களை வெளியிட்டார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரண்டு அதி சிறப்பு அரசிதழ் அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார் என்று சிறிலங்கா அரசாங்க அச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

அலரி மாளிகைக்குள் நுழைந்து ரணிலை வெளியேற்றுவோம் – மகிந்த அணி சூளுரை

பிரதமர் செயலகத்தை விட்டு ரணில் விக்கிரமசிங்க வெளியேற மறுத்தால், அலரி மாளிகைக்குள் நுழைந்து அவரை வெளியேற்றுவோம் என்று எச்சரித்துள்ளார் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச.

அரசியலமைப்பு ரீதியாக நானே பிரதமர் – மைத்திரிக்கு ரணில் கடிதம்

அரசியலமைப்பு ரீதியாக தாமே சிறிலங்காவின் பிரதமராக இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, ரணில் விக்கிரமசிங்க நேற்று இரவு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

சிறிலங்கா இராணுவமும், காவல்துறையும் தமது கட்டுப்பாட்டில் என்கிறார் மங்கள

சிறிலங்கா இராணுவமும், காவல்துறையும் தமது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக, கூட்டு அரசாங்கத்தின் நிதியமைச்சராக இருந்த மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் வசமானது சிறிலங்கா அரச ஊடகங்கள் – ஒளிபரப்புகள் நிறுத்தம்

சிறிலங்காவில் நேற்று கூட்டு அரசாங்கம் பதவி கவிழ்க்கப்பட்டதை அடுத்து, அரச ஊடகங்களின் பணியாளர்கள் அச்சுறுத்தப்பட்டதுடன், நள்ளிரவில் அரச தொலைக்காட்சிகளான ரூபவாஹினி மற்றும் ஐரிஎன் என்பனவற்றை மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அரச ஒளிபரப்புகள் செயலிழந்தன.

அனைவரும் சிறிலங்கா அரசியலமைப்புக்கு அமைய செயற்பட வேண்டும் – அமெரிக்கா

சிறிலங்காவில் அனைத்து தரப்புகளும் வன்முறைகளில் இருந்து விலகி, சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், அரசியலமைப்புக்கு அமைய செயற்பட வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

நள்ளிரவில் சிறிலங்கா காவல்துறை மா அதிபருடன் மகிந்த ஆலோசனை

சிறிலங்கா பிரதமராக நேற்றுமாலை மகிந்த ராஜபக்ச பதவியேற்றதை அடுத்து, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுடன், நள்ளிரவில் ஆலோசனை நடத்தினார்.