மேலும்

மாதம்: September 2018

சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்

ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் 8 ட்ரில்லியன் டொலரை கட்டுமானத் திட்டங்களுக்காக முதலீடு செய்யும் சீனாவின் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டமானது மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது.  குறிப்பாக இத்திட்டத்தின் ஊடாக சீனா தனது எத்தகைய நோக்கத்தை நிறைவேற்றுகிறது என்பதை அறியவே இவ்வாறான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் 69 சீனக்குடா எண்ணெய்த் தாங்கிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில்

திருகோணமலை- சீனக் குடாவில் உள்ள 85 எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவின் உதவியுடன்,  கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்யும் திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

மைத்திரி, கோத்தா கொலைச் சதி – ரிஐடியிடம் இருந்து இரு எல்எம்ஜி துப்பாக்கிகள் மீட்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டமை குறித்து விசாரிக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இரண்டு இலகு இயந்திரத் துப்பாக்கிகள் (எல்எம்ஜி) கைப்பற்றப்பட்டுள்ளன.

மோசமடையும் அரசியல் கைதிகளின் உடல் நிலை – இருவர் மருத்துவமனையில்

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் இருவரின் நிலை மோசமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலை செய்வதற்கு சதி – சிறிலங்கா அதிபரிடம் பாதுகாப்புக் கோரிய கோத்தா

பாதாள உலக குழுத் தலைவர் மாகன்துரே மதுசின் உதவியுடன் தன்னைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒக்ரோபர் 25இற்கு முன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது புதிய அரசியலமைப்பு வரைவு

புதிய அரசியலமைப்பு வரைவு எதிர்வரும் ஒக்ரோபர் 25ஆம் நாளுக்கு முன்னதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்க அதிகாரி ஒருவரை  மேற்கோள்காட்டி,  கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றது.

நாடுகளை இழுக்க சீனாவும் இந்தியாவும் பனிப்போர் – மாலைதீவு முன்னாள் அதிபர்

நாடுகளைத் தமது பக்கத்துக்கு இழுத்துக் கொள்வதற்காக, இந்தியப் பெருங்கடலில் சீனாவும் இந்தியாவும் பனிப்போரில் ஈடுபட்டுள்ளதாக மாலைதீவின் முன்னாள் அதிபர் மொகமட் நசீட் தெரிவித்துள்ளார்.

லெப்.கேணல் எரந்த பீரிசை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரி லெப்.கேணல் எரந்த பீரிஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கில் போராட்டங்கள் தீவிரம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விரைவாக விடுதலை செய்யக் கோரியும், அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வடக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.