மேலும்

மாதம்: September 2018

சரத் பொன்சேகாவிடம் இன்று விசாரணை

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது.

புலனாய்வு அறிக்கைகளுக்கு அமையவே பாதுகாப்பு – சிறிலங்கா இராணுவத் தளபதி

புலனாய்வுப் பிரிவுகள் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கும் மதிப்பீடுகளின் அடிப்படையில் தான், அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

”நாமலுக்கு வயது போதாது என்று இந்தியாவில் கூறவில்லை” – குத்துக்கரணம் அடித்த மகிந்த

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தனது மகன் நாமல் ராஜபக்ச போட்டியிடுவதற்கு வயது போதவில்லை என்று, இந்திய ஊடகங்களுக்கு தாம் கூறியதாக சிறிலங்கா ஊடங்கள் பொய்யான செய்தியை வெளியிட்டதாக கூறியிருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

நீரிழப்பினால் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசம்

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மாலைதீவில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் வெற்றி – கொழும்பிலும் வாக்களிப்பு

மாலைதீவில் நேற்று நடந்த அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட இப்ராகிம் மொகமட் சோலி 58.3 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

நியூயோர்க் ஐ.நா நிலையத்தில் இன்று சிறிலங்கா அதிபர் உரை

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா நிலையத்தில், இன்று உரையாற்றவுள்ளார்.

எதிரிகளைப் பலப்படுத்துகிறார் குமார வெல்கம – கடுப்பில் மகிந்த ராஜபக்ச

கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, எதிரிகளைப் பலப்படுத்தும் வகையில் செயற்படுகிறார் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

உயிருக்குப் பயந்தால் கோத்தா அமெரிக்காவுக்குப் போகட்டும் – சரத் பொன்சேகா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

கொழும்பை பாதுகாக்கும் திட்டம் – கொமாண்டோ படைக்கு சிறிலங்கா இராணுவத் தளபதி உத்தரவு

நாட்டின் முக்கியமான இடங்களின் பாதுகாப்பு தொடர்பான அவசர நிலையை எதிர்கொள்வதற்கான உடனடித் திட்டங்களுடன் தயாராக இருக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகாரச் செயலராகிறார் ரவிநாத ஆரியசிங்க

சிறிலங்கா வெளிவிவகாரச் செயலராக, மூத்த இராஜதந்திரி ரவிநாத ஆரியசிங்க நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரதஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.