மேலும்

மாதம்: September 2018

வடக்கில் மீண்டும் முகாம்களை அமைக்கத் தயார் நிலையில் சிறிலங்கா இராணுவம்

குறிப்பிட்டளவான ஒரு காலத்துக்கு மாத்திரம், சிறிலங்கா இராணுவத்துக்கு தேவையான அதிகாரங்களை வழங்கினால், வடக்கில் செயற்படும் குழுக்களை அடக்கி விட முடியும் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் – ஐ.நா பொதுச்செயலரிடம் மைத்திரி

ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். நியூயோர்க்கில் ஐ.நா தலைமையகத்தில் உள்ள ஐ.நா பொதுச்செயலரின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

போரின் இறுதிக்கால இரகசியங்களை நியூயோர்க்கில் போட்டுடைத்தார் மைத்திரி

போரின் இறுதி இரண்டு வாரங்களில்,  விடுதலைப் புலிகள் கொழும்பில் கொத்தணிக் குண்டுத் தாக்குதலை நடத்த  திட்டமிட்டிருந்ததால், மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, ரட்ணசிறி விக்கிரமநாயக்க, சரத் பொன்சேகா போன்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர் என்று போட்டுடைத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

திடீரென சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச திடீரென இன்று சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இது அவரது தனிப்பட்ட பயணம் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச்செயலர் அலிஸ் வெல்ஸ் அம்மையாரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்காவின் வளர்ச்சிக்குத் தடையாகும் சீனா – ‘போப்ஸ்’

தனது நாட்டை மீண்டும் பேண்தகு வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கு சிறிலங்கா தயாராகியுள்ளது. அடுத்துவரும் பத்தாண்டில் வளர்ந்து வரும் சந்தைகளில் தமக்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காகத் தம்மை நன்றாகத் தயார்ப்படுத்தும் சில நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் உள்ளடங்குவதாக அண்மையில் மக்கின்சி பூகோள நிறுவகத்தால் – McKinsey Global Institute – மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகள் சிறிலங்கா அதிபருக்கு கடிதம்

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளும், ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் தம்மை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கோரி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அரசியல் கைதிகள் விவகாரம் – செவ்வாயன்று மற்றொரு கலந்துரையாடல்

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மற்றொரு கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவுடனான நடைமுறை ஒத்துழைப்பு துரித வளர்ச்சி – சீனத் தூதுவர் பெருமிதம்

சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நடைமுறை ஒத்துழைப்பு கடந்த ஆண்டில் துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார், சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான்.

தலைமன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, சிறிலங்காவின் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.