மேலும்

மாதம்: September 2018

படுகொலைச் சதித் திட்டம் – விசாரணை வளையத்தில் உயர்மட்டக் காவல்துறை அதிகாரிகள்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்ய சதித் திட்டம் தொடர்பாக சிறப்பு அதிரடிப்படையின். கட்டளை அதிகாரி உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியர் மீது பாய்ந்த பயங்கரவாத தடைச்சட்டம் – 3 மாதம் விளக்கமறியல்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்தியக் குடிமகனை, 3 மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய கோட்டே நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

எந்த தகவலையும் இந்தியக் குடிமகன் வெளிப்படுத்தவில்லை – சிறிலங்கா காவல்துறை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக, இந்தியக் குடிமகன் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு எந்த தகவலையும் வெளிப்படுத்தவில்லை என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

படுகொலைச் சதி நினைத்ததை விடப் பயங்கரமாக இருக்கிறது – மகிந்த சமரசிங்க

சிறிலங்கா அதிபர், முன்னாள் அதிபர் உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்வதற்கான சதித் திட்டம்,தொடர்பாக வெளியாகும் தகவல்கள், தாம் நினைத்ததை விட பயங்கரமானதாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் அமைச்சர் மகிந்த சமரசிங்க.

படுகொலைச் சதி குறித்து கைதான இந்தியர் – மனநிலை பாதிக்கப்பட்டவர் என்கிறது இந்தியா

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜப்ச மற்றும் அவரது குடும்பத்தினரைப் படுகொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்தியர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து முக்கிய பேச்சு

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும்,  சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் அலரி மாளிகையில் நேற்று மாலை முக்கிய பேச்சு நடத்தப்பட்டது.

வடக்கின் நிலவரங்கள் குறித்து கேட்டறிந்த தமிழ்நாட்டுப் பிரமுகர்கள்

தமிழ்நாட்டில் இருந்து சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ‘தினமணி’ ஆசிரியர் வைத்தியநாதன், திமுகவை சேர்ந்த சட்டவாளரும், எழுத்தாளருமான கே.எஸ்.இராதாகிருஷ்ணன், மற்றும் கவிஞர் இனியபாரதி ஆகியோர், வவுனியாவில் வடபகுதி நிலவரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமெரிக்க அதிபருடன் சிறிலங்கா அதிபர் சந்திப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியூயோர்க்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்துக் கலந்துரையாடினார்.

தமிழர் தாயகத்தில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகள்

ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர்துறந்த தியாகதீபம் திலீபனின், 31ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழர் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மைத்திரி, மகிந்த, சிராந்தியைக் கொல்ல சதி – கைது செய்யப்பட்ட இந்தியர் தகவல்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது என்பது தனக்குத் தெரியும் என, கைது செய்யப்பட்டுள்ள இந்தியர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.