மேலும்

வடக்கிலுள்ள சிறிலங்கா படைமுகாம்கள் மூடப்படாது – ரணில்

வடக்கில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம்கள் எதுவும். உடனடியாக அகற்றப்படாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்வில் உரையாற்றிய அவர்,

“அடுத்த சில நாட்களில் வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் மூடப்படவுள்ளதாக, சிங்கள வார இதழ் ஒன்றில் செய்தியைப் படித்தேன். அதுபற்றி இராணுவத் தளபதியிடம் கேட்டேன். அப்படி எந்த நகர்வும் இல்லை என்று அவர் கூறினார்.

அதற்குப் பின்னர், வடக்கை விட்டு படையினரை வெளியேறுமாறு வட மாகாண முதலமைச்சர் உத்தரவிட்டாரா என்று விசாரித்தேன்.  அவரும் அவ்வாறு செய்யவில்லை.

இத்தகைய செய்திகள், இன வெறுப்பைத் தூண்டுகின்றன.  நல்லிணக்கத் திட்டம் படிப்படியாக முன்னேற்றமடைந்து வரும் நிலையில் எவராவது இப்படிச் செய்வது சரியானதல்ல.

வடக்கில் சிறிலங்கா இராணுவ முகாம்கள் எதுவும் உடனடியாக அகற்றப்படாது.

ஆனால், இந்தப் பிரதேசத்தின் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படுகின்ற போது, படிப்படியாக முகாம்களின் வெளியேற்றம் தானாகவே இடம்பெறும். உடனடியாக எந்த முகாமும் அகற்றப்படமாட்டாது.” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *