மேலும்

மாதம்: February 2018

தேர்தல் ஆணைக்குழுத் தலைவரை களைப்படைய வைத்து விட்ட உள்ளூராட்சித் தேர்தல்

உள்ளூராட்சித் தேர்தல்கள் தம்மைக் களைப்படைய வைத்து விட்டதாகவும், தமக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்றும்  தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய.

உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக அனைத்துலக காவல்துறையின் சிவப்பு ஆணை

ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக அனைத்துலக காவல்துறையின் சிவப்பு ஆணை (Red Warrant) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விகிதாசார முறைப்படியே மாகாணசபைத் தேர்தல்கள் – ஐதேக ஆராய்வு

மாகாணசபைத் தேர்தல்களை விகிதாசார முறைப்படியே நடத்துவது குறித்து. ஐக்கிய தேசியக் கட்சி ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை அனைத்துலக சமூகம் உறுதி செய்ய வேண்டும் – சம்பந்தன்

அனைத்துலக சமூகத்துக்கும், சிறிலங்கா மக்களுக்கும் சிறிலங்கா அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை, அனைத்துலக  சமூகம் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு வந்து சேர்ந்தார் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ

பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ இன்று பிற்பகல் சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் 10 சபைகளில் பெண்களுக்கான 25 வீத இட ஒதுக்கீட்டில் சிக்கல்

வடக்கு, கிழக்கில் உள்ள குறைந்தது 10 உள்ளூராட்சி சபைகளில், பெண்களுக்கான 25 வீத பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாலைதீவும் சிறிலங்காவும்

மாலைதீவு அரசியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் தாக்கம் சிறிலங்காவில் ஆட்சியைக் கைப்பற்றும் என ஆய்வாளர்களால் குறிப்பிடப்படும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை எச்சரிக்கைக்கு உள்ளாக்குகிறது.

பிரிகேடியர் பிரியங்க விவகாரம் – தீவிரமாக நிலைப்பாட்டில் பிரித்தானியா

லண்டனில் சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தியதை பிரித்தானிய அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்றும், அவரை கொழும்பு திரும்புமாறு உத்தரவிடப்பட்டதாகவும் பிரித்தானியா அமைச்சர் மார்க் பீல்ட் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறிலங்கா அரசு வாக்குறுதிகளை மதிக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் மற்றும் நிலைமாறுகால நீதி ஆகியன தொடர்பான வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் மதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக விசாரணை நடத்தப்படாது

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, கலந்துரையாடலுக்காகவே கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.