மேலும்

ஒரே மேடையில் ‘அரசியல் முக்கோணம்’

Bellanwila Wimalarathana farewell (1)உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளின் போது, ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்த சிறிலங்காவின் அரசியல் தலைவர்கள் மூவரும் நேற்று ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.

யானை தாக்கியதால் படுகாயமடைந்து, மாரடைப்பு ஏற்பட்டு மரணமான பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரரின் இறுதிச்சடங்கு நேற்று சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜெயசூரிய, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்திருந்தனர்.

Bellanwila Wimalarathana farewell (1)

Bellanwila Wimalarathana farewell (2)

சில நாட்களுக்கு முன்னர், தேர்தல் பரப்புரைகளில் இவர்கள் கடுமையாக ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படங்கள் – டெய்லி மிரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *