மேலும்

Tag Archives: பிரதமர்

நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்கச் செயலர் மகிந்தவைச் சந்திக்காதது ஏன்?

நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க செயலர்  மரியன் ஹகென் இறுக்கமான நிகழ்ச்சி நிரல் காரணமாக, சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை, சந்திக்கவில்லை என்று  நோர்வே தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஐதேமு அரசாங்கத்தில் கூட்டமைப்பு இடம்பெறாது – மாவை சேனாதிராசா

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்காது என்றும், தொடர்ந்தும் எதிர்க்கட்சியாகவே செயற்படும் எனவும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

பிரதமர், அமைச்சர்கள் பதவி நீக்கப்படவில்லை – என்கிறார் பீரிஸ்

பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பணியில் ஈடுபடுவதற்கே மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதே தவிர, அவர்களை சட்டரீதியற்றவர்கள் என்ற அறிவிக்கவில்லை என, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இராஜதந்திர நிகழ்வுகளில் பிரதமர், அமைச்சர்களுக்குப் பதிலாக வெளிவிவகாரச் செயலர்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்குப் பதிலாக, வெளிநாட்டுத் தூதரகங்களின் நிகழ்வுகளில், வெளிவிவகாரச் செயலரே, சிறிலங்கா அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்து வருகிறார்.

மகிந்தவின் உரைக்கு ஐதேக போர்க்கொடி – நாடாளுமன்றில் குழப்பம் வெடிக்கும்

நாடாளுமன்றத்தில் இன்று தாம் ஆளும் கட்சி ஆசனங்களில் அமர்ந்து கொள்ளப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளதுடன், மகிந்த ராஜபக்சவை பிரதமராக சிறப்பு உரையாற்ற அனுமதிக்கப் போவதில்லை என்றும் எச்சரித்துள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் இன்று மீண்டும் குழப்பங்கள் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது.

மகிந்தவின் பதவியேற்பில் கீழே விழுந்தார் சிறிசேன

சிறிலங்கா பிரதமராக மகிந்த ராஜபக்ச பணிகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில், அண்மையில் பிரதமரின் செயலராக நியமிக்கப்பட்ட சிறிசேன அமரசேகர நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

புலனாய்வுப் பிரிவை வலுப்படுத்த சிறிலங்காவின் உதவியைக் கோரும் இந்தியா

புலனாய்வுப் பிரிவுகளை வலுப்படுத்துவதற்கு சிறிலங்காவின் உதவியை எதிர்பார்ப்பதாக இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

ஒரே மேடையில் ‘அரசியல் முக்கோணம்’

உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளின் போது, ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்த சிறிலங்காவின் அரசியல் தலைவர்கள் மூவரும் நேற்று ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.

சிறிலங்காவின் அபிவிருத்தி, நல்லிணக்க செயல்முறைகளுக்கு உதவ ஜப்பான் இணக்கம்

அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கச் செயல்முறைகளுக்கு சிறிலங்காவுக்கு முழுமையான ஆதரவை ஜப்பான் வழங்கும் என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ, தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடியும் வரை அரச நியமனங்களை இடைநிறுத்த உத்தரவு

உள்ளூராட்சித் தேர்தல் முடியும் வரைக்கு அரசாங்க நியமனங்கள் வழங்கப்படுவதை இடைநிறுத்துமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.