மேலும்

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்

லங்கா சமசமாசக் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தனது 91வது வயதில் காலமானார் என, குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிறி ஜயவர்த்தனபுர கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார்.

பேராசிரியர் விதாரண 2004ஆம் ஆண்டு தொடக்கம், 2015ஆம் ஆண்டு வரை, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தேசியப் பட்டியல் உறுப்பினராக அங்கம் வகித்ததுடன், விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவராகவும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண செயற்பட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *