மைத்திரியிடம் வெற்றிக்கிண்ணம்
2018ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிக்கான, வெற்றிக்கிண்ணம் சிறிலங்காவுக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிக்கான, வெற்றிக்கிண்ணம் சிறிலங்காவுக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் நாள் நடக்கவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னர், அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சிறிலங்கா பொதுஜன முன்னணியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேலும் ஐந்து மனுக்களை சிறிலங்கா உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, பாரிய நிதி மோசடிகள், ஊழல்கள், முறைகேடுகள் குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகளின் புதிய தூதுவர்கள் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தமது நியமன ஆவணங்களைக் கையளித்தனர்.
சிங்கப்பூருக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டுள்ளது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கிற்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் அதிபர் செயலகத்தில் நேற்று நடந்த இருதரப்பு பேச்சுக்களின் போதே இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
கொழும்பில் மூடப்பட்டிருந்த அமெரிக்க மையம் (American Center) நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
பதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபரை மண்டியிட வைத்து மன்னிப்புக் கோரச் செய்த ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுவிற்சர்லாந்தில் அடைக்கலம் தேடுவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளதாக, சுவிஸ் அரச குடிவரவுச் செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் 10 பேர் மற்றும் ஒரு முதலமைச்சருக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களை, ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடமும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் கையளிக்கவுள்ளனர்.